Friday, May 20, 2011

விண்டோஸ் எக்ஸ்பியில் பிழை செய்தி வராமல் இருக்க














விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்துபவர்கள் அனைவருமே ஏதாவது பிழை செய்தியினை நாள்தோறும் சந்திக்கும் நிலை ஏற்படும். விண்டோஸ் இயக்கத்தில் எங்கு பிரச்சனை உள்ளது என்று இந்த செய்திகள் நமக்குக் காட்டுகின்றன என்பது தெரியாது.

சற்று விபரம் புரிந்தவர்கள் அதனைப் படித்து புரிந்து அதற்கேற்ற வகையில் ஏதேனும் செயல்பாடுகளை மேற்கொள்கிறார்கள். பலர் இங்கே பிழை இருக்கின்றது தெரிந்து என்ன செய்ய?

இது போல செய்திகள் வராமல் இருந்தாலே நல்லது என்று நினைக்கிறார்கள். அவர்களுக்கான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இது போன்ற செய்திகள் வராமல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகளைப் பார்க்கலாம்.

1. ஸ்டார்ட் மெனுவில் My Computer ஐகானில் ரைட் கிளிக் செய்திடவும்.

2. அடுத்து மெனுவில் System Properties விண்டோ திறப்பதற்காக Properties பிரிவில் கிளிக் செய்திடவும்.

3. கிடைக்கும் விண்டோவில் Advanced டேப்பில் கிளிக் செய்திடவும்.

4. இந்த அட்வான்ஸ்டு டேப்பில் கிடைக்கும் விண்டோவில் Error Reporting என ஒரு பட்டன் கிடைக்கும்.

5. இப்போது Error Reporting விண்டோ கிடைக்கும். பின் இதில் Disable Error Reporting என்று இருப்பதனை டிக் செய்திடவும்.

இதனைக் கிளிக் செய்தால் அனைத்து பிழை செய்திகளும் காட்டப்படாமல் இருக்கும் என்று எதிர்பார்க்க வேண்டாம். ஒரு சில முக்கியமான பிரச்சினைகள் உள்ள பிழை செய்திகள் காட்டப்படும்.

எதுவும் வேண்டாம் என்று நினைத்தால் But notify me when critical errors occur என்று இருக்கும் இடத்தில் டிக் அடையாளத்தை ஏற்படுத்துங்கள்.

6. இதன் பின் ஓகே கிளிக் செய்து வெளியேறுங்கள். இனி பிழை செய்திகள் நீங்கள் செட் செய்தபடி மட்டுமே கிடைக்கும் அல்லது கிடைக்காமல் இருக்கும்.


(taken from : http://www.tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=21374&Itemid=423)

--
S.Narasimha Rao
Guru Data
SJKT Bagan Serai (ABD3061)
Tel.: 012-5001705

"Save a tree. Please don't print this e-mail unless it's absolutely necessary."

No comments:

Post a Comment