தமிழில் தேடுவதற்கு கூகிள் தரும் அற்புத வசதி
Labels: google, Type setting
தேடுவது என்று சொன்னால் நம்மில் பலர் செல்லுமிடம் கூகிள் தான்.இன்று நாம் பார்க்கப்போவது கூகிள் மூலம் இலகுவாக தமிழில் டைப் செய்து தேடுவது எப்படி என்று. Search Engine களில் ஆங்கில சொற்களை நேரடியாக டைப் செய்து தேடுவது மாதிரி தமிழ் சொற்களை டைப் செய்து தேட முடியாது.அப்படி Search Engine இல் தமிழில் தேட வேண்டுமாயின் வேறு ஒரு இடத்தில் டைப் செய்து அதை யுனிகோடுக்கு மாற்றி அதை copy செய்து, paste செய்து கொள்ள வேண்டும்.இந்த முறையானது நமக்கு சிரமத்தை ஏற்படுத்துகின்றது.
ஆனால் Google Search Engine இல் தமிழில் டைப் செய்து தேடும் வசதி இருக்கின்றது என்பது நம்மில் பலருக்கு தெரியாது.Google Search Engine இல் தமிழில் டைப் செய்து தேடுவதற்கு
http://www.google.lk/ என்பதற்கு சென்று,தமிழ் என்பதை கிளிக் செய்யுங்கள்.
உதாரணமாக நீங்கள் thamil என்று டைப் செய்தீர்கள் என்றால், கீழே தமிழ் சம்பந்தமான முடிவுகளை காணலாம்.இது தமிழில் தேடும் சந்தர்ப்பத்தில் மிகவும் இலகுவாக அமையும்.
இனி தமிழில் தேடுவதற்கு யுனிகோடுக்கு மாற்ற வேண்டிய அவசியமில்லை,நேரடியாகவே டைப் செய்து கொள்ளலாம்.
--
S.Narasimha Rao
Guru Data
SJKT Bagan Serai (ABD3061)
Tel.: 012-5001705
"Save a tree. Please don't print this e-mail unless it's absolutely necessary."
No comments:
Post a Comment