Wednesday, March 30, 2011

Firefox_Save closed tabs (in Tamil)


நெருப்புநரி-4 உலவியை விட்டு வெளியேறும் போது Save Tabs என்னும் வசதியை எனேபிள் செய்ய

அண்மையில் வெளியான நெருப்புநரி4 உலவியில் பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன, முந்தைய பதிப்புகளுடைய இந்த பதிப்பு மிகவும் சிறப்புடையதாக உள்ளது. முந்தைய பதிப்புகளை விட மிக விரைவாக வலைப்பக்கங்களை இந்த பதிப்பில் காண முடிகிறது. ஆனால் ஒரு சில சிறப்பம்சங்கள் மறைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் நாம் ஒரு உலவியில் பல்வேறு டேப்களில் உலாவரும் போது, முழுவதுமாக உலவியினை மூட நினைப்போம். ஆனால் அவ்வாறு விண்டோவினை மூடும் போது டேப்கள் திறக்கப்பட்டுள்ளன அதையும் சேர்த்து மூடிவிடவா என்ற ஒரு செய்தி வரும். ஆனால் தற்போதைய நெருப்புநரி4 உலவியில் அதுபோன்ற செய்தி எதுவும் வராது. இந்த வசதியை எனேபில் செய்ய ஒரு சில மாற்றங்களை செய்ய வேண்டும்.


இந்த வசதியை எனேபிள் செய்ய முதலில் நெருப்புநரி உலவியை அட்ரஸ்பாரில் about:config என்று தட்டச்சு செய்து உள்ளிடவும். அடுத்ததாக தோன்றும் விண்டோவில் "I'll be careful, I promise!" என்பதை கிளிக் செய்யவும். அடுத்ததாக filter என்பதற்கு நேராக உள்ள டெக்ஸ்ட் பாக்சில் browser.showQuitWarning என்று உள்ளிட்டு ஒகே செய்யவும்.


தோன்றும் browser.showQuitWarning என்னும் தேர்வினை இரட்டை கிளிக் செய்யவும். இல்லையெனில் வலது கிளிக் செய்து Toggle என்பதை தேர்வு செய்யவும். value என்பதில் ture இருக்கும். இப்போது நெருப்புநரி உலவியை மறுதொடக்கம் செய்யவும். நீங்கள் தற்போது ஒரே விண்டோவில் பல டேப்களை ஒப்பன் செய்து பணியாற்றி கொண்டு இருக்கும் போது, தீடிரென மறதியாக மூடும் போது எச்சரிக்கை செய்தி வரும்.


இந்த எச்சரிக்கை செய்தியினை டிசேபிள் செய்ய வேண்டுமெனில், இதே முறையை பின்பற்றி value என்பதில் false என்று உள்ளிடவும். இதே போல பல்வேறு விதமான வசதிகள் நெருப்புநரி4 உலவியில் மறைக்கப்பட்டுள்ளது.

(taken from : http://tamilcomputerinfo.blogspot.com/2011/03/4-save-tabs.html)



--
S.Narasimha Rao
Guru Data
SJKT Bagan Serai (ABD3061)
Tel.: 012-5001705

"Save a tree. Please don't print this e-mail unless it's absolutely necessary."

No comments:

Post a Comment